azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is a tree of delusion, with all its branches, leaves and flowers of maya. You can realize this, when all your acts are dedicated offerings to God. See Him as the sap that runs through every cell; the Sun that is warming and building each atom. See Him in all and worship Him through all, for He is all. Engage in activity, filling it with devotion. It is devotion that sanctifies. A piece of paper is almost a trash, but if the contents of a certificate are written on it, you value and treasure it; it becomes a passport for promotion in life. Hence it is the bhaava (feelings behind an act) that matters, and not baahya (outward pomp and show). Without knowing this secret of transforming every action into an act of worship, people suffer from disappointment and grief. In sacred places of worship, stones of little value are shaped as Divine forms or idols. But when the feeling of devotion transmutes the idol, it becomes the highest treasure for the human mind.(Divine Discourse, Jan 14, 1966)
வாழ்க்கை என்பது மாயை என்ற மரத்தின் கிளைகள்,இலைகள் மற்றும் பூக்களால் ஆனது. உங்களது எல்லாச் செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணமாக ஆக்கும்போது இதை நீங்கள் உணர்வீர்கள். அவனை ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி இருக்கும் ஊட்டச் சத்தாக,ஒவ்வொரு அணுவையும் உஷ்ணப்படுத்தி,அவற்றை வளர்க்கும் சூரியனாகக் காணுங்கள். அனைத்திலும் அவனைக் கண்டு, அனைத்தின் வழியாகவும் அவனை வழிபடுங்கள், ஏனெனில் அனைத்தும் அவனே. பக்தியால் நிரப்பி, அனைத்து பணிகளையும் ஆற்றுங்கள். பக்தியே புனிதப்படுத்தும் ஒன்று. ஒரு சாதாரண காகிதம் குப்பையைப் போன்றதே, ஆனால் அதில் ஒரு சான்றிதழின் பொருளடக்கங்கள் எழுதப் பட்டு இருந்தால், அதை மதித்து செல்வமெனப் போற்றுகிறீர்கள்;அதுவே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாஸ்போர்ட் ஆகிவிடுகிறது. எனவே ஒரு செயலாற்றும் போது உள்ள உணர்வுகள் ( பாவம் ) முக்கியமே அன்றி, வெளிப்படையான பகட்டு, படாடோபங்கள் ( பாஹ்யம்) அல்ல. ஒவ்வொரு செயலையும் வழிபாடாக மாற்றும் இந்த ரகசியத்தை உணராது மக்கள் ஏமாற்றம் மற்றும் துயரத்தினால் பாதிக்கப் படுகிறார்கள். புனித வழிபாட்டுத் தலங்களில் மதிப்பற்ற கற்கள், தெய்வீக உருவங்கள் மற்றும் சிலைகளாக வடிக்கப் பட்டுள்ளன. ஆனால் பக்தி என்ற உணர்வு அந்தச் சிலையின் பண்பை மாற்றும் போது, அதுவே மனித மனத்தின் மிகச் சிறந்த பொக்கிஷமாக ஆகிவிடுகிறது.