azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 23 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 23 Aug 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Only when you put into practice the love in which you have faith, love will grow. Since you do not practice what you profess, your faith gets weakened. A plant will grow only when it is watered regularly. When you have planted the seed of love, you can make it grow only by watering it with love every day. The tree of love will grow and yield the fruits of love. Many today do not perform those noble deeds that will promote love. When you wish to develop love for the Lord, you must continuously practice loving devotion to the Lord.
எவ்வளவு அன்போடு உங்களது நம்பிக்கை இருக்கிறதோ,அதே அன்பை நீங்கள் நடைமுறையில் கொண்டு வந்தால் தான் அந்த அன்பு வளர முடியும். நீங்கள் போதிப்பதை நீங்களே கடைப் பிடிக்காததால், உங்களது நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. ஒரு செடிக்கு முறையாக நீர் ஊற்றப் பட்டால் தான் அது வளர முடியும். அன்பு என்ற விதையை நீங்கள் நட்ட பின்,அதற்கு அன்போடு தினமும் நீர் ஊற்றினால்தான் அது வளர முடியும். அன்பென்ற அந்த மரம் வளர்ந்து அன்பில் தோய்ந்த கனிகளைத் தரும். பலர் இன்று அத்தகைய அன்பை வளர்க்கும் சீரிய செயல்களைச் செய்வதில்லை. இறைவன் மீது நீங்கள் அன்பை வளர்த்துக் கொள்ள விரும்பினால்,தொடர்ந்து அவன் மீது அன்பு கலந்த பக்தியை செலுத்த வேண்டும்.