azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 Oct 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
The body is but a boat, an instrument for crossing the sea of births and deaths, that you have earned through the merits of many generations. Crossing the sea is to realise the Dweller, in the Dwelling. The purpose of the body (deha) is to realize the Indweller (Dehi). So even when the body is strong and skilled, the intellect is sharp and the mind alert, every effort must be made to seek the Indweller. So keep your body fit, strong and free from trouble. Just as the boat should be seaworthy, your body too should be fit for its purpose. You must take good care of it.(Divine Discourse, Aug 3, 1966.)
The human body, fitted with skills, capable of great adventures,
is a gift from God to each of you. - Baba
இந்த உடல்,பல தலைமுறைகளில் ஈட்டிய புண்ணியத்தினால் நீங்கள் பெற்ற, பிறப்பு,இறப்பு என்ற பவசாகரத்தைக் கடப்பதற்கான ஒரு படகே .ஸாகரத்தைக் கடப்பது என்றால், உடல் எனும் உறைவிடத்தின் உள் உறைபவனை உணர்வதாகும். இந்த '' தேஹத்தின்'' நோக்கமே உள்ளுறையும்,'' தேஹியை '' உணர்வது தான். எனவே, இந்த உடல் வலிமையாகவும்,திறன் படைத்ததாகவும் , புத்தி கூர்மையாகவும், மனம் விழிப்புடனும் இருக்கும் போதே, உள்ளுறையும் இறைவனைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும். எனவே உங்கள் உடலை சீராகவும், வலிமை உள்ளதாகவும்,பிரச்னைகள் அற்றதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வாறு ஒரு படகு, கடலைக் கடப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டுமோ, உங்கள் உடலும் கூட அதன் குறிக்கோளை அடைவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நீங்கள் அதை கண்டிப்பாக ,நன்கு பராமரிக்க வேண்டும்.
பல ஆற்றல்கள் பொருந்திய, மாபெரும் சாதனைகளைப் படைக்கும் திறன் கொண்ட, இந்த மனித உடல்,உங்கள் ஒவ்வொருவருக்கும் இறைவனால் அளிக்கப் பட்ட பரிசாகும். - பாபா